வலங்கைமான், ஆக. 21: வலங்கைமான் அடுத்த இனாம் கிளியூர் பகுதியில் வீட்டில் லைட் எரியவில்லை என சரி செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த இனாம் கிளியூர் கீழத்தெருவைச் சேர்ந்த வீரையன் என்பவரின் மகன் ரமேஷ்(43). இவர் வீட்டில் லைட் எரியவில்லை என பல்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பம் குறித்து அவரது மனைவி வனிதா கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.