முத்துப்பேட்டை, நவ.19: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முத்துப்பேட்டை ஒன்றிய ஜாக்டோ ஜியோ மற்றும் எஸ்எஸ்டிஏ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய தலைவர் இரா.காதண்டராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழிய சங்க வட்ட தலைவர். ராமகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் நலன் காக்கும் தேர்தல் கால வாக்குறுதியான பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய பொருளாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.


