நீடாமங்கலம்,செப்.19: கொரடாச்சேரி ஒன்றியம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இப்பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் செல்வம் துவக்கி வைத்து தன்னார்வலர்களுக்கு இத்திட்டத்தை பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார்.
பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரபு மற்றும் ராஜபாண்டியன் ஆகியோர் 18 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் எண்ணறிவு எவ்வாறு கற்பிப்பது என்பதை பற்றி எடுத்துரைத்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிருந்தா தேவி கற்போருக்கான கற்றல் முன்னேற்றத்திறகான ஆலோசனைகளை வழங்கினார். இப்பயிற்சியில் 30 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியினை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.