Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர், செப்.19: திருவாரூர் துர்காலயா சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (19ந் தேதி) நடைபெறுகிறது. அதன்படி காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான்,

பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மின் கணக்கீடு தொடர்பான புகர்கள், பழுதடைந்த மின் கம்பங்கள், மின் மானிகள், தாழ்வான மின் பாதை மற்றும் குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட தங்களது குறைகளை நேரில் விண்ணப்பமாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.