திருவாரூர், நவ. 18: திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் 2வது நாளாக காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு சாரல் மழையாக பெய்தது. இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு சாரல் மழையானது பெய்தது.
இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லு£ரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்களும் பாதிப்பிற்குள்ளாகினர். மேலும் குளிர்ந்த காற்று வீசிகொண்டே இருந்ததால் கடும் குளிர் காரணமாகவும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த மழையானது சம்பா சாகுபடியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உகந்ததாக இருந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு, திருவாரூர் 12, நன்னிலம் 3.1, மன்னார்குடி 7, பாண்டவையாறுதலைப்பு 1.4, திருத்றைப்பூண்டி 13.2, முத்துப்பேட்டை 12.2 என மொத்தம் 48.9 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.


