திருவாரூர், நவ. 18: திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மருத்துவமனையினை திறக்க கோரி பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் கழகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் அருகே அம்மையப்பனில் இருந்து வரும் அரசு மருத்துவமனையினை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் மேலும் அங்குள்ளடாஸ்மாக் கடையானது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருவதால் அதனை அகற்றிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் மக்கள் அதிகாரம் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஆசாத், இணை செயலாளர் லெனின், வி.சி.க பொறுப்பாளர்கள் மகேந்திரன், சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் வாஞ்சிநாதன், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


