வலங்கைமான் அக். 18: வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வலங்கைமான் ஊரா ட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி மூலால்வாஞ்சேரி நார்த்தாங்குடி பூனாயிருப்பு உள்ளிட்ட 9 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் தகுதியானவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி சாதிச்சான்று முன்னுரிமைச் சான்று மற்றும் ஆதார் பதிவேற்றம் செய்ய வேண்டும். இன சுழற்சி வயது மற்றும் கல்வித் தகுதி உள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே காலதாமதம் இன்றி விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

