மன்னார்குடி, செப். 18: தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் விழாவான நேற்று மன்னார்குடியில் புதுப்பிக்கப் பட்ட அவரது உருவச்சிலைக்கு திமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் மேலவாசல் தனராஜ், நகர செயலாளர் வீரா கணேசன், நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்தலை யாமங்கலம் பாலு, மாவட்ட அயலக அமை ப்பாளர் ஆர்வி.ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, திக சார்பில் மாவட்ட தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், நகர செயலாளர் ஆர்ஜி குமார், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன்,நகர செயலா ளர் சன்சரவணன், காங்கிரஸ் சார்பில் வடுகநா தன், நெடுவை குணசேகரன், சிபிஐ நகர செயலாளர் கலியபெருமாள், தேமு திக சார்பில் நகர செயலாளர் கார்த்திக்கேயன், தவெக சார்பில் நகர செயலா ளர் ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சமூகஅமைப்பினர் தந்தை பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.