திருத்துறைப்பூண்டி, ஆக.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை இரத்த வங்கி டெல்டா ரோட்டரி சங்கம் இணைந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் தெற்குவீதி மணி மருத்துவமனையில் நடைபெற்றது. டெல்டா ரோட்டரி சங்க தலைவர் மதன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றிவைத்தார்.
மண்டல துணை ஆளுநர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார், விழாவில் முன்னாள் தலைவர்கள் தமிழ் பால் சிவகுமார், செல்வகுமார், காளிதாஸ், ரகுராமன், ரமேஷ், மாணிக்கவாசகம், பாலமுருகன், முன்னாள் செயலாளர்கள் ராஜதுரை,அகிலன், சேர்மன் குமார் மருத்துவர்கள் பாபு அபிநயா பாபு மற்றும் நிர்வாகிகள் ராமலிங்கம், விஜயராஜ், சந்தோஷ், மணிகண்டன், இளஞ்சேரலாதன், தம்பிதிலீபன், மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயலாளர் கார்த்திக், பொருளாளர் கோகுல வசந்த் செய்து இருந்தனர்.