திருத்துறைப்பூண்டி, அக். 17: திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் கிருத்திகா ஜோதி உத்தரவின்படி *தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம்* என்ற தலைப்பின் கீழ் திருத்துறைப்பூண்டி நகராட்சி வார்டு எண் -12 அபிஷேக கட்டளை ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை விழிப்புணர்வு வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement