திருவாரூர், அக்.17: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-யை முன்னிட்டு திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்திற்கு செல்லும் சாலையில் பனை விதைகள் நடும் விழா மண்டல இணைப்பதிவாளர் கா.சித்ரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் நா.இளையராஜா மற்றும் த.கார்த்தீபன் ,சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் இரா.சுதாகர் மற்றும் வீ.இராஜதுரை, துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அலுவலக கண்காணிப்பாளர் கே.நாகூர் ஹனிபா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு சுமார் 250 பனை விதைகளை நட்டனர். ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ஞா.பழனி மற்றும் அலுவலக பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.