மன்னார்குடி, செப். 17: மன்னார்குடி அடுத்த மேல பள்ளிசத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரிமளா (50). இவரது மகள் பாரதிக்கும், கீழப்பனையூரை சேர்ந்த மண்கண்டன் (31) என் பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. மண்கண்டன் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வரும் மனைவி பலமுறை அழைத்தும் சேர்ந்து வாழ அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வழக்கம் போல் மாமியார் பாரதியை குடும்பம் நடத்த தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரிடம் கேட்டு உள்ளார்.அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த மணிகண்டன் கீழே கிடந்த ரீப்பர் கட்டையை எடுத்து மாமியாரை சரமாரி தாக்கி விட்டு தப்பிவிட்டார். இது குறித்து பரிமளா கோட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாமியாரை தாக்கிய மருமகன் மணிகண்டனை கைது செய்தனர்.