Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் சேதம் அடைந்த சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, செப்.17: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் பாண்டி ஊராட்சி செம்பியமங்கலம் வழியாக ஆதிரெங்கம் சாலை 5 கிலோமீட்டர் தூரம் இதில் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு 2 கிலோ மீட்டர் பாதி சேதம் அடைந்துள்ளது. முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு 3 கிலோமீட்டர் தூரம் முழுவதும் சேதம் தற்போது தார்சாலை போடும் பணி நடைபெறுகிறது.

ஆனால் இந்த இரண்டு ஒன்றியத்திற்குட்ப்பட்ட பாண்டி - ஆதிரெங்கம் சாலை 5 கிலோமீட்டர் தூரம் இதில் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு 2 கிலோ மீட்டர் பாதி சேதம் அடைந்து உள்ளது, இந்த வழியாக சென்று வேதராண்யம் மெயின் சாலை பிடிக்க முடியும் எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.