முத்துப்பேட்டை, செப்.17: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் ஷேக்தாவூது என்பவர் மளிகைகடை நடத்தி வருகின்றார். இந்தநிலையில் கடந்த வாரம் அவரது கடையும் வீடும் தீ பிடித்து எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்தில் கடை மற்றும் வீட்டிலிருந்த விற்பனை வைத்திருந்த பொருட்கள், பிரிட்ஜ், பீரோ கட்டில் மற்றும் ரூ.90 ஆயிரம் பணம் உட்பட சுமார் ரூ.5லட்சத்திற்கும் மேல் பொருட்கள் சேதமாகியது.
இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உதவிக்கரம் நீட்ட முன்வந்து மாவட்ட தலைவர் முகமது அசாருதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர் யாசர் அரஃபாத், மாவட்ட தொண்டர் அணி ஹாஜா மைதீன் மற்றும் நெடும்பலம் கிளை தாஜ், செயலாளர் ஹனிபா உள்ளிடே அங்கு சென்று ஷேக்தாவூது குடும்பத்திற்கு முதல் கட்டமாக ரூ.20,000 நிவாரண உதவியாக வழங்கினர்.