முத்துப்பேட்டை,செப்.16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் ஆலங்காடு, மருதவனம், எடையூர் வேப்பஞ்சேரி ஓமங்காடு ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.
இம்முகாமில் வேப்பஞ்சேரி டாக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான மருத்துவகுழுவில் இடும்பாவனம் டாக்டர் மகேந்திரன், ஒதியதூர் டாக்டர் காயத்ரி, கால் நடை ஆய்வாளர்கள் நிர்ம லா, ஜெகநாநன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சத்தியசீலன், தமிழ்ச்செல்வி, பிரசன்னா, மாதவன் வீரமணி ஆகியோர் அடங்கிய குழுவினர் சுமார் 1100 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்த முகாம்களை கால்நடை பராமரிப்பு துறையின் முத்துப்பேட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மகேந்திரன் ஆய்வு செய்தார்.