திருவாரூர்,செப்.15: நன்னிலம் அருகே குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா மாப்பிளைகுப்பம் சன்னதி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துக்குமார்(30) குடி பழக்கம் உள்ளவரான இவர் நேற்று முன்தினம் கடும் குடிபோதையில் சென்றுக்கொண்டிருந்தபோது அருகில் உள்ள பிடாரி கோவில் குளம் அருகே உள்ள வாய்காலில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய முத்துக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த நன்னிலம் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் முத்துக்குமார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.