திருத்துறைப்பூண்டி, அக். 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரு கே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை வெற்றிப்படிகள் என்ற அரசு திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவும் தேர்வுகளை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்காகவும் கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை வகித்தார்.முன்னதாக ஆசிரியை மாலதி வரவேற்றார். வெற்றி பள்ளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரசிகா பேசும்போது: நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். ஜேஇஇ தேர்வு இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களின் கணித பாட அறிவுத்திறனை சோதிப்பதற்கு உரிய தேர்வாகும். தமிழ்நாட்டில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, தேசிய சட்டப் பள்ளி, மத்திய பல்கலைக்கழகம் போன்றவற்றில் நுழைவுத் தேர்வு மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை பற்றி விளக்கினார். நிகழ்ச்சியை ஆசிரியை தனுஜா தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை ரேணுகா நன்றி கூறினார்.