திருத்துறைப்பூண்டி, அக்.13: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலைவிழாவையொட்டி இசைப் போட்டிகள் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் முரளி வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், தவில் இசை வித்வான் சித்திரை செல்வன், முன்னாள் ராணுவ வீரர் பாலசந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியில் கலந்துக் கொண்டவர்களை தேர்வு செய்தனர். பாபு சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.