திருவாரூர், அக். 13: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,ஓ.பி.சி, இ.பி.சி, டி.என்.டி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 2025-26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவிதொகை இணையமுகவரியில் (https://scholarships.gov.in) வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்து வரும் பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை மறுதினம் (15ம்தேதி) ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நாள் 31ம் தேதி ஆகும்.இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட https://scholarships.gov.in என்ற இணையதளத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.