திருவள்ளூர் அக்.13: திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்
நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க ஒன்றியச் செயலாளர் பேபி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சபீனா, செண்பகவல்லி, கன்னியம்மாள், சசிகலா, லூர்து அந்தோணியம்மாள், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி விளக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு பணியாளர்களுக்கு சிம் கார்டு மட்டும் வழங்குவதை நிறுத்த வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒவ்வொரு பணியாளரும் குறைந்தது 3, 4 மையங்களில் பணியாற்ற வேண்டிய அவல நிலையை போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் லட்சுமி நன்றி கூறினார்.