Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் அருகே பைக்கில் மது பாட்டில் கடத்திய வாலிபர் கைது

திருவாரூர், செப்.13: திருவாரூர் அருகே பைக்கில் மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அட்டைப்பெட்டியில் 180 எம்.எல். அளவு கொண்ட 120 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் போலீசாரின் விசாரணையில் மது பாட்டில்களை கடத்தி வந்த நபர் மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் சுரேஷ் (23)என்பதும் இதே போன்று டூவீலர் மூலம் மது பாட்டில்களை கடத்தி விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மது பாட்டில்கள்மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மது விற்பனை தொகை ரூ.9 ஆயிரத்து 900 யும் பறிமுதல் செய்துள்ளனர்.