திருத்துறைப்பூண்டி, நவ.12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் 16 அடி உயர ஆஞ்சநேயர் சாமி உள்ளது. இந்த கோயில் எதிர்புறம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி திருத்துறைப்பூண்டி கிளை இயங்கி வந்தது.
இந்த வங்கில் விவசாயிகள்,வர்த்தகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். இந்நிலையில் இந்த பழையகட்டித்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டபட உள்ளது. புதிய கட்டிடம் கட்டும் வரை இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த 10 ம் தேதி முதல் பெரிய கோயில் கீழ வீதி கீதா மளிகை அருகில் இங்கி வருவதாக வங்கி கிளை மேலாளர் குமார் தெரிவித்துள்ளார்.
