மன்னார்குடி, நவ. 12: கூத்தாநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு வீட் டில் இருந்து வந்தார், இவரும், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அபிஷேக் (20) என்ற வாலிபரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காத லித்து வந்தாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கடந்த சில மாதங்களாக பேசுவதை தவிர்த்து வந்ததால் அபிஷேக் ஆத்திரத் தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெண்ணின் வீட்டின் அருகே வைத்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரின் புருவம் மற்றும் பின்னந் தலையில் வெட்டி விட்டு தப்பி யோடி விட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மாவட்ட தலை மை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகா ரின் பேரில் இன்ஸ் பெக்டர் வெர்ஜீனியா, எஸ்ஐ பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அபிஷேக்கை கைது செய்தனர்.பின்னர், அவரை மன்னார் குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி நீதிபதி உத் தரவின் பேரில் கிளைச் சிறையில் அடைத்தனர்.
