திருத்துறைப்பூண்டி, செப்.10: திருத்துறைப்பூண்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் சார்பாக உலக எழுத்தறிவு தின கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் சார்பாக உலக எழுத்தறிவு தின கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சக்கரபாணி, ஆசிரியர்கள் பாக்கியராஜ், எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் கருணாமூர்த்தி வரவேற்றார். திட்ட அலுவலர் பாஸ்கரன் பேசுகையில், எழுத்தறிவின் அடிப்படை வாசிப்பு ஆகும் வாசிப்பு ஒருவரின் எழுத்தறிவுக்கு அச்சாணியாக இருப்பதால் வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். எழுத்தறிவு என்பது ஒரு மனிதனின் உயர்வு மட்டும் அல்ல அது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் ஒரு சக்தி எனவே எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லாத ஒரு உலகை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும் என்றார். ஆசிரியை அஜிதா ராணி நன்றி கூறினார்.