நீடாமங்கலம்,செப்.10: நீடாமங்கலத்தில் இருந்து மனனார்குடி சாலை தட்டி தெரு பாலம் அருகே பேருந்து நிழற் குடை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலம்,நீடாமங்கலம் ஒன்றியம் பூவனூர் ஊராட்சி தட்டி தெரு இடையே நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இணைப்பு பாலம் கோரையாற்றில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு பாலம் வழியாக கொத்தமங்கலம், நீடாமங்கலம் பெரியார் தெரு,பெரம்பூர், முல்லைவாசல், புதுத்தெரு வை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பேருந்தில் ஏரி நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி செல்லலாம் ஆனால் இங்குள்ள மக்கள் நேரடியாக நீடாமங்கலம் அல்லது ராஜப்பையன் சாவடி சென்று பஸ்ஸில்,ஏரி வெளியூர் செல்கின்றனர்.மக்களின் நலன் கருதி கொத்தமங்கலம் தட்டித்தெரு கோரையாற்று இணைப்பு பாலம் மன்னார்குடி சாலையில் பேருந்து நிழல் குடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.