திருவாரூர், செப்.10: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா கல்லிக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சேகர் மகன் கிருஷ்ணா (24). கூலி தொழிலாளியான இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் கிருஷ்ணா தனது வீட்டில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் இளைஞர் கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement