திருத்துறைப்பூண்டி அக் 9:திருத்துறைப்பூண்டி அரசுப்பள்ளியில் மின்னியல் தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மின்னியல் தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி கணேஷ் பிவிசி தயாரிப்பு நிறுவனத்தில் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. அதில் மாணவர்களுக்கு மின்சார இணைப்பு பெட்டி அதன் மூடிகள் தயாரிப்பு அதற்கு தேவையான பொருட்கள் ஆன உயர் அடர்த்தி பாலி எத்திலின் கொண்டு தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் மேல்நிலைத் தொழில்கல்வி ஆசிரியர்கள் முகமது ரஃபீக், பாலசுப்பிரமணியன், கணினி ஆசிரியர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement