நீடாமங்கலம்,அக்.9: கொரடாச்சேரியில் திமுக இலக்கிய அணி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படைப்புகளில் இருந்து பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் 11, 12 -ம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு கவிதை எழுதினார்கள். நிகழ்ச்சியில், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமை வகித்து போட்டியினை துவக்கி வைத்து விடை தாள்களை போட்டியாளர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை வாழ்த்தி முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர், முன்னால் ஒன்றிய குழு துணை தலைவர் பாலச்சந்திரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் நல்லாசிரியர் புலவர் எண்கண் மணி, துணைத் தலைவர் தியாகராஜன், கொரடாச்சேரி நகர செயலாளர் கலைவேந்தன், இலக்கிய அணி நிர்வாகிகள் ஜாகிர் உசேன், இளங்கோவன், நல்லாசிரியர் செல்லதுரை, சோமசுந்தரம், முத்து ஆகியோர் பேசினார்கள்.
+
Advertisement