வலங்கைமான், அக்.9: வலங்கைமான் அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை 100% நிகழ்த்திமைக்காக தமிழக அரசு சார்பில் நல் ஆசான் விருது வலங்கைமான் கல்லூரி முதல்வருக்கு வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. கல்லூரியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் கல்லூரி வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நடப்பு 25- 26 கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடியாக இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையினை 100 சதவீதம் நிகழ்த்திமைக்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கல்லூரி முதல்வர் ஜான் லூயிசுக்கு நல் ஆசான் விருது வழங்கினார். அதனை அடுத்துதமிழக அரசின் நல் ஆசான் விருது பெற்ற கல்லூரி முதல்வருக்கு கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள், பேராசிரியர்கள், சப்போர்ட்டிங் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது.
+
Advertisement