மன்னார்குடி, அக். 8: திமுக அரசின் சாதனைகளை விளக்கி குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் நூதன பிரச்சாரம் மன்னார்குடியில் திமுக உறுப்பினர் சேலம் கோவிந்தன் என்பவர் நேற்று குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் திமுக அரசின் சாதனைகளை பொது மக்க ளிடையே நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம், பெண்களுக்கு கட்டண மில்லா பேருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகை, தொழில் வளர்ச் சிகள், மகளிர் உரிமைத் தொகை போன்றவைகளை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று குடுகுடுப்பை அடித்தபடி ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா என்கின்ற படி கடை வீதிகள், பேருந்து நிறுத்தம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
அவ்வாறு செய்த கோவிந்தனுக்கு நகர்மன்ற தலைவர் மன் னை சோழராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திமுக அரசின் சாதனைகளை குடுகுடுப்பை அடித்து நூதன பரப்புரையில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.