திருத்துறைப்பூண்டி,நவ.7: மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி நடந்தது. திருத்துறைப்பூண்டி மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் பிரைட் பீப்பிள் சமுதாயக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை தஞ்சை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் பூர்ணச்சந்திரன் நடத்தினார்.
திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் சுதந்திர மணி தலைமை வகித்தார். பிரைட் பீப்பிள் சமுதாயக் கல்லூரி முதல்வர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்றுவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். கலந்துக்கொணட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது,
