திருத்துறைப்பூண்டி,நவ.7: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் பணி நடந்தது. திருத்துறைப்பூண்டி நகராட்சியை பசுமையாக்கும் திட்டத்தின்படி பழமரங்கள் நடும் பணியை நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி, பாலம் தொண்டு சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிகையில் தற்போது நகராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது,
இதில் டிம்பர் மரங்கள், பழமரங்கள், அழகு தரும் செடிகள் நடப்பட்டு வருகிறது. குறிப்பாக 5000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நீர்நிலைகளின் கரைகளில் நடப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் அதிகமான மரங்கள் நகர் பகுதியில் நடப்படவுள்ளது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பொறியாளர் வசந்தன், சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
