வலங்கைமான்,நவ.7: வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் அங்கன்வாடி உதவியாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதி மேலத்தெரு சேர்ந்தவர் ரமேஷ் மனைவி காமாட்சி அம்மாள் (47). அங்கன்வாடி உதவியாளர். இவர் அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், அதே பகுதியில் ஹானஸ்ட்ராஜ் என்பவர் மனைவிக்கு சத்துமாவு கொடுக்க சென்றபோது குழந்தை பிறந்ததற்கு எனது மனைவிக்கு அரசாங்கத்தால் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் சத்துமாவு கொடுக்க வந்து உள்ளாயா எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி செல்போனை உடைத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஹரித்வார மங்கலம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி ஹானஸ்ட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement
