வலங்கைமான், நவ.5: வலங்கைமான் பகுதியில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் போது முக கவசம் அணிய வேண்டும் என வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வலங்கைமான் பகுதியில் நெற்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்தை கையாளும் இப்போது முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள்குறித்துவலங்கைமான் வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மருந்தை பயன்படுத்த கைத்தெளிப்பான் பயன்படுத்தும் போது பாதுகாப்பான முறையில் முகக் கவசம், கையுறை, கண் கண்ணாடி, தலைக்கவசம், முழு உடைக்கவசம், போன்றவற்றை அவசியம் அணிய வேண்டும் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பின்பு கைத்தெளிப்பானை சுத்தமாக கழுவ வேண்டும் .
விவசாயிகள் ரசாயன மருந்துகளின் பயன்பாடுகளை குறைத்து இயற்கையாகவே பூச்சிகளை கட்டுப்படுத்த நம்மை சுற்றியுள்ள தாவரங்களையும், பொருட்களையும், பயன்படுத்தி வரப்பு பயிர் சாகுபடி , பொறிப் பயிர்கள் சாகுபடி, தேனீக்கள் வளர்ப்பு, மூலிகை பூச்சி விரட்டி, பறவை குடியில் அமைத்தல், ‘T’ வடிவ குச்சி நடுதல் போன்ற விவசாயிகளின் செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
