நீடாமங்கலம், நவ.5: நீடமங்கலம் கோரையாற்று பாலத்திலிருந்து செல்லும் வழியில் மின் கம்பத்தில் கொடிகள் சூழ்ந்து ஆபத்தான நிலையில் எரியும் விளக்கு மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் பழையநீடாமங்கலம் செல்லும் சாலை,புதுத்தெரு உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பத்தில் கீழிருந்து பலவகையான கொடிகள் சென்று மின் கம்பிகள் செல்கிறது.
இந்நிலையில் இதே போன்று கோரையாற்று பாலத்திலிருந்து மாதா கோயில்,ஆங்கில தொடக்கப்பள்ளி,மகா மாரியம்மன் கோயில் ,திரவுபதியம்மன் கோயில் மற்றும் பள்ளிகள்,அரசு முக்கிய அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான முக்கிய சாலை மாதா கோயில் கேட் முன்புறமே பல ஆண்டுகளாக அங்குள்ள மின் கம்மத்தில் கீழிருந்து கோடிகள் சென்று கம்பிகள் ,லைட்டை சூழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த சாலை முக்கிய சாலை என்பதால் மின் கம்பியிலிருந்து மின் கசிவு ஏற்ப்பட்டு கீழே செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கி பெரும் இழப்பு ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்து ஏற்படும் முன் மின் கம்பம்,கம்பி,லைட்டை சூழ்ந்துள்ள கொடிகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
