திருத்துறைப்பூண்டி, அக்.4: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அமைதியின் சார்பாக வரம்பியும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது. ஒரு வார கால சிறப்பு முகாம் நிறைவு விழாவில் சான்றிதழ், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார் திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார் மாவட்ட தொடர்பு அலுவலர் சக்கரபாணி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பேசினார் மாணவன் முகுந்த சிம்மன் நன்றி கூறினார்.
+
Advertisement