முத்துப்பேட்டை,நவ.1: முத்துப்பேட்டையில் தர்கா சந்தன கூடுவிழாவை முன்னிட்டு ,இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள உலக பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் பெரிய கந்தூரி விழா கடந்த அக் 23ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது முக்கிய நாளான இன்று இரவு புனித சந்தன கூடு விழா நடைபெறுகிறது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள். இந்தநிலையில் இன்று 1ந்தேதி நடைபெறும் தர்கா சந்தன கூடுவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடை பகுதியில் உள்ள கடை எண்: 9672, 9688, 9790, 9770 ஆகிய டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
