திருத்துறைப்பூண்டி, நவ. 1: சாலையின் இரு புறங்களிலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் கருவேல மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி பகுதியிலிருந்து பொன்னிரை வரை செல்லும் ஆற்றங்கரை சாலை இருபுறங்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.
இவ்வழியாக பள்ளி கல்லூரி நகர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையின் இரு புறங்களிலும் உள்ள கருவேல மரங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு உள்ளதால் விபத்து நேரிடும் இதனால் உடனடியாக சாலையின் இரு புறங்களிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
