திருத்துறைப்பூண்டி, ஜூலை 31: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக நகர்மன்ற தலைவர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி வார்டு எண் -4,5,16 ஆகிய வார்டுகளில் உள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 1ம் தேதி திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்கள் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மற்றும் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர். முகாமிற்கு தேவை இருப்பின் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று கேட்டு கொண்டனர். இதில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் அம்பிகா மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.