முத்துப்பேட்டை, ஆக.2: முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகள் நடைப்பெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இதில் கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகளை கராத்தே பயிற்றுனர் சரகணபதி மாணவர்களுக்கு வழங்கி பயிற்சி அளித்தார்.
இதில் மாணவர்களுக்கு தற்காப்புக்கலையின் அவசியம் குறித்து கூறப்பட்டது. வாரத்தில் 2நாள்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இதில் 6 முதல் 10 வகுப்பு மாணவியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் சோமு, பொறுப்பாசிரியர் கனகா மற்றும் ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைகுழு தலைவி மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.