Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சர்வதேச சாரணர் தின கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஆக.3: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சாரணர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் பாக்யராஜ், பாஸ்கரன், எழிலரசி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் சர்வதேச சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சாரணியர் இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன.

இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும் என கூறினார். திரி சாரணர் பிரிவு மாணவர் வசந்த் நன்றி கூறினார். நிகழ்வில் சாரணர் இயக்கம் மற்றும், திரிசாரணர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.