Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மின்கட்டணம் உயர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம், ஜூலை 26: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மின்சார வாரிய அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி , மாவட்ட குழு உறுப்பினர் சுமதி , ஒன்றிய குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை ,செல்வமணி. சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.