Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குவிண்டால் பருத்தி ₹7,196க்கு ஏலம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூர், ஆக. 2: திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் வணிக இயக்குனருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட புலிவலம் ஊராட்சியில் ரூ.40 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணலி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் மணலி, சாத்தாங்குடி சாலை மேம்பாட்டு பணி நடைபெற்றுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மணலி ஊராட்சி பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு விவரம் குறித்த பதிவேடு, பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.குறும்பல் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், தண்டலச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய நிலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைவாகவும், உரிய தரத்துடனும் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, கலெக்டர் சாரு, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் இளஞ்சேரன், மன்னார்குடி ஆர்.டிஓ கீர்த்தனாமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மனோகர், தாசில்தார் காரல்மார்க்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெய்வநாயகி, தியாகராஜன், ஒன்றிய பொறியாளர் வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.