மன்னார்குடி, அக். 29: மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் கபடி போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க 15 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாடு மாநில 51 வது ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டிகள் நவம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த மாநில அளவிலான போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வடுவூர் விளையாட்டு அகாடமி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 56 வீரர்கள் பங்கேற்றனர்.

