முத்துப்பேட்டை, அக். 29: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தியில் பகுதியில் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை சங்கேந்தி கடைதெரு கிழக்கு கடற்கரை நான்கு சாலை பிரியும் இடத்தில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட மக்கள் கோசமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
இதையடுத்து அங்கு வந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, எடையூர் சப்.இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

