திருத்துறைப்பூண்டி, அக். 29: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்தனர். அகமுடையர் சங்கம் சார்பில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், மகா கணபதி ,பெரியநாயகி அம்மன், முருகப்பெருமான், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் முருகப்பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது

