திருவாரூர்,அக்.28: டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்து வரும் சாக்கு தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும் என அரசுக்கு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல்களை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு இருந்து வருவதால் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். மேலும் கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரி இயக்கம் என்பது ஒரு தனியார் நிறுவனத்திற்கு மொத்தமாக டெண்டர் விடப்பட்டுள்ளதால் அந்த நிறுவனத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக விரைந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதில் தாமதம் இருந்து வருவதால் அதன் மூலம் ஏற்படும் இழப்பிற்கு சம்பந்தப்பட்ட டெண்டர் எடுத்துள்ள லாரி நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement

