முத்துப்பேட்டை,அக்.26: அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை அச்சுறுத்தி வருவதால் உடன் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்புகளின் தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அடிக்கடி டூவிலர்களில் செல்பவர்களை குறுக்கே வரும் நாய்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் நாய்களின் சிலவைகள் வெறி பிடித்து காணப்பட்டதால் ஏராளமான மாடுகள், ஆடுகளை கடித்து குதறி சாகடித்து வருகிறது. அதேபோல் நோய்வாய்ப்பட்ட நாய்கள் ஏராளமானவையும் நகரில் சுற்றி திரிகிறது இதனால் மக்களுக்கு பல்வேறு வியாதிகளை பரப்பும் அபாயமும் உள்ளது. சமீபத்தில் கூட குழந்தைகளை நாய்கள் துரத்தி காயம் படுத்திய சம்பவமும் அதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் சீண்டிய சம்பவங்களும் இப்பகுதியில் நிறைய நடந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லையால் முத்துப்பேட்டை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.இந்தநிலையில் முத்துப்பேட்டை பழைய பேரூந்து நிலையம் அருகே உள்ள புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது இங்கு படிப்பவர்கள் அனைவரும் சிறார்கள் இங்கு தினமும் சாலையில் சுற்றி திரியும் சுமார் 20க்கும் மேற்பட்ட நாய்கள் கும்பலாக பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் இதில் சில மாணவர்கள் விளையாட்டாக நாய்களை விரட்டும்போது அந்த மாணவர்களை பார்த்து சீரும் காட்சியும் தொடர்ந்துக்கொண்டு உள்ளது. இப்படி தொடர்ச்சியாக சிறுவர்களையும் பொது மக்களையும் அச்சுறுத்தி வரும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம் இனியும் காலதாமதம் ஏற்ப்படுத்தாமல் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
