மன்னார்குடி, அக். 25: மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் கபடி போட்டிக்கு திருவாரூர் மாவட்ட அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வரும் 26ம் தேதி வடுவூர் விளையாட்டு அகாடமி உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜ ராஜேந் திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில 51-வது ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்டப் போட்டிகள் நவம்பர் 7ம் தேதி முதல் 9 ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.இப்போட்டியில், திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள ஜூனியர் ஆண்கள் கபடி அணிக்கான தேர்வு போட்டிகள் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு வடுவூர் விளையாட்டு அகாடமி உள்விளை யாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் 18 01. 2006 அன்றோ அல் லது அதற்குப் பிறகு பிறந்தவராகவும் 20 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எடை 75 கிலோ அல்லது அதற்கும் கீழே இருக்க வேண்டும். செயற்கை ஆடுகளத்தில் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளதால் வீரர்கள் காலணி மற்றும் ஆதார் அட்டை நகல் கண்டிப்பாக கொண்டு வரவும்.மாவட்ட கபடி கழகத்தில் 2025ஆம் ஆண்டு பதிவு செய்த பள்ளி, கல்லூரி மற்றும் கபடிக் குழுக்களை சேர்ந்த வீரர்கள் மட்டுமே தேர்வு போட்டிகளில் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை கபடி வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருவாரூர் மாவட்ட அமைச்சர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
