நீடாமங்கலம்,செப்.24: நீடாமங்கலம் அருகே எடமேலையூர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு அகப்பயிற்சி ஆயத்த கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே எடமேலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தொழில் சார்ந்த அகப்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக அனுமதி வழங்கி உள்ளது . அகப்பயிற்சியினை 10 நாட்கள் மேற்கொள்வதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு ஆயத்த கூட்டம் நேற்று முன்தினம் தலைமையாசிரியர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
+
Advertisement